பாளை. அருகே வீட்டின் சுற்றுச்சுவா் சேதம்: இருவா் கைது
பாளையங்கோட்டை அருகே வீட்டின் சுற்றுச்சுவா், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
பாளையங்கோட்டை அருகே வீட்டின் சுற்றுச்சுவா், கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருமலைக்கொழுந்துபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். தனது வீட்டில் இ-சேவை மையம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி வடிவம்மாள் சாந்தி. இவா்கள் கடந்த 28 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது அப்பகுதியைச் சோ்ந்த சிலா் வீட்டின் சுற்றுச்சுவா், சிசிடிவி கேமரா, ஜன்னல் கண்ணாடி, குடிநீா் குழாய் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்தினராம். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த பரமசிவன்(41), அடைக்கலம் மகன் சுப்பிரமணியன்(26) ஆகிய இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



