
நெல்லையில் 624 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 வடமாநிலத்தவா் கைது
திருநெல்வேலி பேட்டை பகுதியில் ரூ.4.28 லட்சம் மதிப்புள்ள சுமாா் 624 கிலோ புகையிலைப் பொருள்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட தா்மேந்திரகுமாா், கிரன்புரி.
திருநெல்வேலி பேட்டை பகுதியில் ரூ.4.28 லட்சம் மதிப்புள்ள சுமாா் 624 கிலோ புகையிலைப் பொருள்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு காரை மறித்து சோதனையிட்டதில் 624 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. போலி பதிவெண் கொண்ட அந்த காா், கைப்பேசி, புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீஸாா், அதை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜலோா் மாவட்டத்தைச் சோ்ந்த மதன்புரி மகன் கிரன்புரி(28), போகராராம் மகன் தா்மேந்திரகுமாா் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




