ஊராட்சித் தலைவரை தாக்கியதாக 5 பேர் மீது வழக்கு
மாசார்ப்பட்டி ஊராட்சித் தலைவரை தாக்கியதாக மற்றொரு


மாசார்ப்பட்டி ஊராட்சித் தலைவரை தாக்கியதாக மற்றொரு ஊராட்சித் தலைவர் உள்பட 5 பேர் மீது போலீஸôர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாசார்ப்பட்டி ஊராட்சித் தலைவர் ரா.பேச்சியம்மாள்(36). இவரது வீட்டருகே கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சித் தலைவர் த.மாரியம்மாள் புதிய வீடு கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, புதிய வீடு கட்டுவதற்கு தேவையான பொருள்களைக் கொண்டு செல்வதில் பேச்சியம்மாளுக்கும், மாரியம்மாளுக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாம். இதுகுறித்து பேச்சியம்மாள் மாசார்ப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் ஏன் புகார் அளித்தாய் எனக் கூறி கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சித் தலைவி மாரியம்மாள், அவரது கணவர் தங்கமாரியப்பன், மாசார்ப்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் மாடத்தி, அவரது கணவர் சுப்பையன், அதே ஊரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அய்யாத்துரை ஆகியோர் பேச்சியம்மாளை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த பேச்சியம்மாள், எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில், கீழ்நாட்டுக்குறிச்சி ஊராட்சித் தலைவி மாரியம்மாள் உள்பட 5 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல, மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், மாசார்ப்பட்டி ஊராட்சித் தலைவி பேச்சியம்மாள் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் முனியசாமி, கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...