ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இளையோர் செஞ்சுருள் முகாம்

மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் முகாமில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:37 pm

தினமணி

மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் முகாமில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் கழக முகாம் ராமநாதபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு  பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

முகாமின்போது தியானப் பயிற்சி, ரத்ததான விழிப்புணர்வு, கைவினைப் பொருள்கள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ராஜ்பரத், அபிஷேக், சுதீஸ்பெருமாள், பாலஹரிஹரன், ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த அணிக்கான முதல் பரிசும், கலைநிகழ்ச்சிக்கு இரண்டாம் பரிசும் பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.  விழாவில் பள்ளியின் தாளாளர் ஜெயா சண்முகம் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினம் மற்றும் ஜே.ஆர்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கிருபை வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் நாகலட்சுமி செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.