ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இம்மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:42 pm

தினமணி

:தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இம்மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 9-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டிகள், மேஜைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்துப் போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக 5 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

எனவே தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.