விவசாயிகளின் அனைத்து கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி எட்டயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எட்டயபுரம் வட்டம், விவசாயிகள் சங்கத்தின் 4-வது மாநாடு சனிக்கிழமை பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சின்னமலைக்குன்றைச் சேர்ந்த ரெங்கசாமி தலைமை வகித்தார்.
மாநாட்டு கொடியை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் நல்லையா ஏற்றினார். மாநாட்டை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில உதவித் தலைவர் பெரும்படையார் தொடங்கி வைத்துப் பேசினார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் மன்றச் செயலர் பாலமுருகன், மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கச் செயலர் சேது, விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் லெனின்குமார், பாரதி ஆய்வாளர் இளசைமணியன் ஆகியோர் பேசினர். மாநாட்டு அறிக்கையை எட்டயபுரம் வட்ட விவசாயிகள் சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்தார். மாநாட்டில் எட்டயபுரம் தாலுகாக் குழுத் தலைவராக ரெங்கசாமி, செயலராக கிருஷ்ணமூர்த்தி, பொருளாளராக ராஜபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். வறட்சி நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும். எட்டயபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம், கிளை கருவூலம் ஆகியவை அமைக்க வேண்டும். எட்டயபுரத்தில் அரசு சார்பில் கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.
விவசாயிகளின் விளைபொருள்களை பாதுகாக்கும் வகையில், குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும். நடப்பு ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எட்டயபுரம் வட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


