மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சாத்தான்குளம் அருகே தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சாவு

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சனிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார்.

Updated On :

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் வெட்டுக் காயமடைந்த பெண் சனிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார்.

செட்டிவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்தா மேரி (65). இவருக்கு 4 மகள்களும், இரு மகன்களும் உள்ளனர். இவரை அவரது மகள் ஜான்சிராணி (45) கவனித்து வந்தாராம். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன் சென்னையில் இருந்து வந்த அவரது மகன் தங்கதுரை (35) சொந்த ஊரிலேயே விறகு வெட்டும் தொழில் செய்து வந்தாராம்.

இந்நிலையில் அவர் பிரான்சிஸ்தாமேரியிடம் உள்ள 6 சென்ட் நிலத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்தாராம். இந்நிலையில் இம்மாதம் 21ஆம் தேதி இதுதொடர்பாக தங்கதுரைக்கும்,  பிரான்சிஸ்தாமேரிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது  தங்கதுரை, அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.

இதை தடுக்க முயன்ற ஜான்சிராணியையும், அவரது மகள் ஆரோக்கியஜெனிபரையும் (16) தங்கதுரை அரிவாளால் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் ஜான்சிராணி சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே ஜான்சிராணி இறந்ததால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தங்கதுரை மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.