ஆடை அலங்கரித்தல் பயிலரங்கம்

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்களுக்கான ஆடை அலங்கரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது.  
Updated on
1 min read

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்களுக்கான ஆடை அலங்கரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது.  
இக் கல்லூரியும்,  தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றமும் இணைந்து கிராமப்புறங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில் 5 நாள்கள் கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பயிலரங்கை திங்கள்கிழமை முதல் தொடங்கின.
நான்காம் நாளாக  நடைபெற்ற பயிலரங்கில், ஆயத்த ஆடை வடிவமைப்புத் துறை சார்பில் ஆடை  அலங்கரித்தல் பயிற்சி நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) கிருஷ்ணசாமி தலைமை வகித்து பயிலரங்கைத் தொடங்கிவைத்தார்.  வேதியியல் துறை தலைவர்  உமாதேவி,  மின்னணுவியல் துறை தலைவர் சங்கர்கணேஷ்,  உடற்கல்வி இயக்குநர் கோதையம்மாள் ஆகியோர் பேசினர். 
கோவில்பட்டி தனியார் நிறுவன உரிமையாளர் ஜான்பீட்டர் ஆடை  அலங்கரித்தல் தொடர்பான செய்முறை பயிற்சியளித்தார்.  கல்லூரியின் ஆயத்த ஆடை வடிவமைப்புத் துறை தலைவர் சந்தானலட்சுமி,  ஆடை  அலங்கரித்தல் என்ற தலைப்பில் பேசினார். 
பயிலரங்கில்,  பொதுமக்கள்,  மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள்,  கல்லூரி மாணவர், மாணவிகள்,  கிராமப்புற இளைஞர்கள்,  விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  உதவிப் பேராசிரியர் சிவசங்கரன் நன்றி கூறினார். 
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறை இணைப் பேராசிரியருமான வெங்கடேசன் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com