விபத்தில் முதியவர் சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதி உயிரிழந்தார்.


தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்ற முதியவர் சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதி உயிரிழந்தார்.
தூத்துக்குடி இந்திராநகரைச் சேர்ந்தவர் சூர்யா (65). கூலித் தொழிலாளியான இவர், புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து விட்டு வீட்டுக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தாராம். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இந்திரா நகரைச் சேர்ந்த முருகராஜியிடம் சூர்யா லிப்ட் கேட்டு ஏறிச் சென்றாராம்.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில், காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சூர்யா சிறிது நேரத்தில் அங்கு உயிரிழந்தார். முருகராஜ் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...