எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

9 இடங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.10) 9 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:19 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ.10) 9 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 9 இடங்களில் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை   சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
  அதன்படி, தூத்துக்குடி வட்டத்தில் வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஸ்ரீமுலக்கரை கிராமத்திலும், திருச்செந்தூர் வட்டத்தில் மெஞ்ஞானபுரம் கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் முதலூர் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் பிள்ளையார்நத்தம் கிராமத்திலும்,   விளாத்திகுளம் வட்டத்தில் கீழவிளாத்திகுளம் பகுதி-1 கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் மேலஈரால் - வாலம்பட்டி கிராமத்திலும்,  ஓட்டப்பிடாரம் வட்டத்தில் தருவைக்குளம் கிராமத்திலும், கயத்தாறு வட்டத்தில் குருவிநத்தம் கிராமத்திலும் இம் முகாம் நடைபெறுகிறது.
  முகாமின்போது முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனு அளித்த பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.