வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வனத்திருப்பதி பெருமாள் கோயிலிலில் பவித்ரோத்ஸவம்

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலில்  பவித்ரோத்ஸவம் 4 நாள்கள் நடைபெற்றது.  

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:48 am

DIN

நாசரேத் அருகே உள்ள வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலிலில்  பவித்ரோத்ஸவம் 4 நாள்கள் நடைபெற்றது.  
இதையொட்டி கோயிலில் தினமும் காலை,  மாலையில்  ரிக்,  யசூர், சாமவேத பாராயணம், திவ்ய பிரபந்த சேவை சாத்துமுறைகள் நடைபெற்றன. தினமும் காலை, மாலை வேளைகளில் பெருமாள் விசேஷ அலங்காரத்தில் காட்சி அளித்தார். முதல்நாள் காலையில் மூலவர் திருமஞ்சனம்,  81கலச அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. 2ஆம் நாள் சுவாமி புன்னைமர வாகனத்தில் அலங்கார பவித்ரபூஜை,  ரக்ஷா பந்தனம், யாகசாலை பூஜைகள்,  திருவாராதனம்,  சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருள, அலங்கார பூஜை,  திருவாராதனம்,  பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றது.
3ஆவது நாள் யாகசாலை பூஜைகள்,  சுவாமி அன்னவாகனத்தில் எழுந்தருளல்,  சுவாமி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளல்,  திருவாராதனம்,  பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றது. 4ஆவது நாள் விஷ்ணுபதி, யாகசாலை பூஜைகள், திருவாதாரண பூர்த்தி,  சுவாமி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா,  தீர்த்தவாரி சேவை, சாற்றுமுறை ஆகியனவும்,  மாலையில் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.