கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காஷ்மீரிலிருந்து இளைஞர்கள் சைக்கிள் யாத்திரை: கோவில்பட்டியில் வரவேற்பு

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்களுக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.  

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:53 am

DIN

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் செல்லும் இளைஞர்களுக்கு கோவில்பட்டியில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.  
விளையாட்டுத் துறையில் பாரதம் சாதனை படைக்க வேண்டும். பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கிரிடா பாரதி என்ற அமைப்பின் சார்பில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8 இளைஞர்கள் கொண்ட குழு செல்லும் சைக்கிள் யாத்திரை கடந்த செப். 9ஆம் தேதி காஷ்மீரில் தொடங்கியது.
கோவில்பட்டிக்கு புதன்கிழமை வந்த அந்த இளைஞர்களுக்கு பயணியர் விடுதி முன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த கேசவன், சேவா பாரதி மாவட்ட அமைப்பாளர் தானுமாமூர்த்தி, பாஜக மாவட்ட இளைஞரணித் தலைவர் மாரிசெல்வம், நகரத் தலைவர் வேல்ராஜா, பொதுச் செயலர் முனியராஜ், நகர இளைஞரணித் தலைவர் காளிதாசன்,  நகர பொதுச்செயலர் தினேஷ்குமார்,  பாஜக சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த இளைஞர்கள் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை (அக்.12)  தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.