ஆழ்வார்திருநகரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஆழ்வார்திருநகரி சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் நடைபெற்ற முகாமிற்கு அதிமுக ஆழ்வார்திருநகரி நகரச் செயலர் செந்தில் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி அரசு சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் சுஜாதா, மருத்துவர் செங்கனி ஆகியோர் டெங்கு நோய் தடுப்பு முறைகள் குறித்துப் பேசினர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் விஸ்வநாதன், அபுதாகீர், சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...