டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சுகாதாரத்தை பாதுகாக்கக் கோரி முற்றுகை

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரில் சுகாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில்

Updated On :9 ஏப்ரல் 2018, 11:27 pm

கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி தாமஸ் நகரில் சுகாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட தாமஸ் நகரில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனராம். இதுகுறித்து ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். 
மேலும், தாமஸ் நகர் பகுதியில் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாருகாலை முறையாக சுத்தம் செய்யவது இல்லை. குப்பைகளை முறையாக அகற்றாததால் தெருக்களில் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றதாம். 
எனவே, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியில் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்ய வேண்டும். கொசுத் தொல்லையை முற்றிலும் அகற்ற வேண்டும். தாமஸ் நகர் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி மர்மக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அங்குள்ள ஹாக்கி மைதானம் அருகே குப்பைகள் சேருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலர் கதிரேசன் தலைமையில், வழக்குரைஞரணி மாநிலத் துணைச் செயலர் பெஞ்சமின் பிராங்கிளின், கட்சியின் கிறிஸ்துவ ஜனநாயகப் பேரவையைச் சேர்ந்த அமல்ராஜ், கட்சியின் ஒன்றியச் செயலர் மாடசாமி, தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் இசக்கிமுத்து, இளைஞரணியைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். 
பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அனிதாவிடம் வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர், கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.