மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

விளாத்திகுளம் அருகே விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு

விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:28 pm

விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் நிலத் தகராறில் விவசாயியை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் சண்முகவேல் (60). இவர் தற்போது தூத்துக்குடியில் வசித்து வருகிறார். ராமச்சந்திராபுரத்தில் உள்ள இவருடைய விவசாய நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் போலி ஆவணங்களை தயார்செய்து ஆக்கிரமித்திருந்தனராம்.
இதையறிந்த சண்முகவேல், ராமச்சந்திராபுரத்துக்கு சென்று தன்னிடம் உள்ள ஆவணங்களை காட்டி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ், செந்தூர், முருகானந்தம், மையில்ராஜ் ஆகிய 4 பேர் சேர்ந்து சண்முகவேலை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சண்முகவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தாக்கியதாகக் கூறப்படும் 4 பேர் மீதும் விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.