கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதி முன் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பசுமை பயணம் குழுவினர் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவில்பட்டி பகுதி இளைஞர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கட்செவி அஞ்சல், முகநூல், இணையதளம் மூலமாக இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

