நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

காவிரி பிரச்னையில் மத்திய  அரசு தவறு செய்கிறது: டி.டி.வி.தினகரன்

காவிரி பிரச்னையில் மத்திய  அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி.தினகரன். 

Updated On :19 ஏப்ரல் 2018, 2:11 am IST

காவிரி பிரச்னையில் மத்திய  அரசு தவறு செய்து கொண்டிருக்கிறது என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டி.டி.வி.தினகரன். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதிமுக பொதுச்செயலர் வைகோவின் உறவினர் சரவணசுரேஷ் அண்மையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 
அவரது சொந்த ஊரான கோவில்பட்டியையடுத்த பெருமாள்பட்டியில் உள்ள இல்லத்துக்கு சென்ற டி.டி.வி.தினகரன், அவரது தந்தை ராமானுஜம் மற்றும் உறவினர்களிடம்  ஆறுதல் கூறினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குளத்தூரில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, வைகோ வாகனத்தின் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய விஷயத்தில், மத்திய அரசு பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறது. இதை தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் தட்டிக்  கேட்பர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.