வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தூத்துக்குடியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க தமாகா வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெற்கு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:55 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நீண்ட நாள்களாக கிடப்பில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின்போது, தெற்கு மாவட்டத்தில் வாக்குச்சாவடி கமிட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை தாமதமில்லாமல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
 கூட்டத்தில்,  மாவட்டச் செயலர் மூக்கன்சாமி,  துணைத் தலைவர் ரவிக்குமார், பொருளாளர் பாலசிங், வட்டாரத் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.