ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கோவில்பட்டி கோயிலில் ருத்ர ஏகாதசி ஹோமம், சிறப்பு பூஜைகள்

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Updated On :

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
இதையொட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.  காலை 8  மணிக்கு அருள்மிகு பூவனநாத சுவாமி சன்னதியில் உலக மக்களின் நன்மைக்காகவும், மழை வேண்டியும் ருத்ர ஏகாதசி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஜனக் கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பிராமண மகா சபையினர் செய்திருந்தனர்.
ஆடிக்கார்த்திகை: ஆடிக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, திருவீதியுலா நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.