
சாத்தான்குளம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகே பண்டாரபுரம் உதயநகரைச் சேர்ந்தவர் டே. ஜான்கென்னடி (54), கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மல்லிகா (50), சோனியா (21) உள்ளிட்ட 3 மகள்களும், ஜான்வஷிங்டன் (16) உள்ளிட்ட 4 மகன்களும் உள்ளனர். ஜான்வஷிங்டன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது சகோதரர்கள் 3 பேரும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர்.
மூத்த மகள் சோனியாவுக்கும், சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பைச் சேர்ந்த மோகன்ராஜ் (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ், மங்களூரில் கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சோனியா, கணவரை பிரிந்து கடந்த 4 மாதங்களாக பண்டாரபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
சோனியா, கணவரை பிரிந்து வாழ்வதற்கு தனது மனைவி மல்லிகாதான் காரணம் என ஜான்கென்னடி கருதினார். இதுதொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சோனியா உள்ளிட்ட மகள்கள் 3 பேரும் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர். மல்லிகா, அவரது கணவர் ஜான்கென்னடி இருவரும் வீட்டின் முன்அறையில் இருந்தனர். அப்போது, சோனியா தனது கணவரை பிரிந்து வாழ்வது தொடர்பாக மல்லிகாவுக்கும், ஜான்கென்னடிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜான்கென்னடி, அரிவாள் மற்றும் கம்பால் மல்லிகாவை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மல்லிகா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். சோனியா மற்றும் அவரது சகோதரிகள் இருந்த அறைக் கதவை ஜான்கென்னடி வெளிப்பக்கம் பூட்டியிருந்ததால், அவர்களால் வெளியே வரமுடியவில்லையாம். இந்நிலையில், ஜான்கென்னடி அங்கிருந்து தலைமறைவானார்.
தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜாசுந்தர், உதவி ஆய்வாளர் ஆழ்வார் மற்றும் போலீஸார் அங்கு சென்று மல்லிகா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஜான்கென்னடியை தேடிவந்தனர்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்து, சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஸ்ரீவைகுண்டம் பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


முதல்வா் கூறிய மூன்று கோப்புகளையும் 1 வாரத்தில் திறக்காவிட்டால் உரிமை மீறல் தீா்மானம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

தருமபுரியில் உயா்ந்து வரும் வைக்கோல் விலை : குறுவை சாகுபடி பாதிப்பால் மேலும் உயர வாய்ப்பு!



