மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது!சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படைதில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தாவே காரணம்: ஐ.நா.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடு
/

ஸ்டெர்லைட் விவகாரம்: தூத்துக்குடியில் டிச. 21 இல் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வரும் 21 ஆம் தேதி

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வரும் 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம், மாநகரச் செயலர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் அகமது இக்பால் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்று திறக்கக் கூடாது, சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்தி ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், முதல்கட்டமாக தூத்துக்குடியில் டிசம்பர் 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியது:
 ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அல்லது சட்டப்பேரவையை கூட்டி மக்களின் உணர்வுபடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் டிசம்பர் 21 ஆம் தேதி காலை கண்டனப் போராட்டம் நடத்த உள்ளோம். காவல் துறையிடம் அனுமதி பெற்றே போராட்டம் நடத்தப்படும். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.