தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை பெண் ஒருவர் தன் தாய் மற்றும் தங்கையுடன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மூவரையும் மீட்ட போலீஸார் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு விடுவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரி (32). இவர் தன் தாய் கிருஷ்ணம்மாள், தங்கை ஜெயமீனா மற்றும் 6 வயது மகனுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சிறிது நேரம் நின்ற நான்கு பேரும் ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள சாலையின் ஓரத்தில் அமர்ந்தனர். அப்போது, சண்முகசுந்தரி, கிருஷ்ணம்மாள், ஜெயமீனா ஆகிய மூவரும் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்றனர்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்கள் மூவரையும் தடுத்து காப்பாற்றினர். தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிப்காட் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
சண்முகசுந்தரி சென்னையில் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்ததாகவும், அப்போது, பெங்களூருவை சேர்ந்த கார்த்திக் பசுபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலசந்திரனிடம் அளித்த புகாரில், அவர் கார்த்திக் குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தற்கொலை செய்ய முயன்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


