மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி முற்றுகை

தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாயப் பயிர்கள் மிகக்

Updated On :25 டிசம்பர் 2018, 7:17 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் விவசாயப் பயிர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். 
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் சரியான விளைச்சலின்றி மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 2016-17ஆம் ஆண்டு விவசாயிகள் காப்பீடு செய்த மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது வரை காப்பீட்டு நிறுவனம் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை. 
பயிர்க் காப்பீட்டுத் தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் 4  ஆண்டுகளாக விளைச்சல் இல்லாத காரணத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் அனைத்துப் பயிர்க் கடன் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 
மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தியும் மதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் அழகர்சாமி தலைமையில், மதிமுக மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ், நகரச் செயலர் பால்ராஜ் உள்பட திரளான விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.