சாத்தான்குளம் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்..
சாத்தான்குளம் அருகே உள்ள அன்பின்நகரை சேர்ந்தவர் பொ. மிகாவேல்(23), தொழிலாளி. இவர், அவரது உறவினரான பள்ளி மாணவர் கு. டேவிட் பட்டுராஜுடன்(16) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிநகருக்கு பைக்கில் சென்றனர். அடைக்கலாபுரம் பகுதியில் பைக் சென்றபோது சாலையில் நாய் குறுக்கே சென்றதாம். இதனால் நிலைகுலைந்த இருவரும் பைக்கில் இருந்து தவறிவிழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக , திருநெல்வேலி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மிகாவேல், திங்கள்கிழமை காலை இறந்தார். டேவிட்பட்டுராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


