விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சொத்துவரி நிலுவையில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும்: மாநகராட்சி ஆணையர்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி நிலுவையில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:28 am

DIN

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சொத்துவரி நிலுவையில் உள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு சொத்துவரி,  குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் குத்தகை இனங்களுக்குரிய கட்டணம் ஆகியவற்றை நிகழ் நிதியாண்டுக்குரிய (2017-18) வரி இனங்களை நிலுவையின்றி மாநகராட்சி கணினி வசூல் மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் சொத்துவரி அரையாண்டு ஆரம்பித்த 30 நாள்களுக்குள் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள முதல் அரையாண்டு வரி ஏப்ரல் மாதத்துக்குள்ளும்,  அக்டோபர் முதல் மார்ச் முடிய உள்ள இரண்டாவது அரையாண்டு வரி அக்டோபர் மாதத்துக்குள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு இல்லாத பல்வேறு கட்டடங்கள் 2016-17 இரண்டாம் அரையாண்டு வரை சொத்துவரி செலுத்தாமல் பெருமளவில் நிலுவையில் இருப்பதால் மாநகராட்சி மூலம் மாநகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 2017-18 ஆம் நிதியாண்டு முடியும் தருவாயில் உள்ளதால் நிலுவையாக உள்ள அனைத்து வரிகளையும் உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறும் நிலையில் மாநகராட்சி சட்டவிதிகள் மற்றும் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வரி நிலுவைதாரர்களின் பட்டியல் ரரர.பஏஞஞபஏமஓமஈஐஇஞதடஞதஅபஐஞச.இஞங  என்ற மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே,  பிப்.20ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள வணிக நிறுவனத்தின் நிலுவை தொகையை மார்ச் 7ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால் வணிக நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தவும், பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.