குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

விளாத்திகுளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்

விளாத்திகுளம் அருகே பூசனூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள்  நடைபெற்றன.

News image
Updated On :9 ஜூலை 2018, 2:08 am

DIN

விளாத்திகுளம் அருகே பூசனூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிகள்  நடைபெற்றன. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மாட்டு வண்டிகள் முதலிடம் பெற்றன.
விளாத்திகுளம் அருகே பூசனூரில் ஸ்ரீ காளியம்மன் கோயில், ஸ்ரீ தேவி, ஸ்ரீபூமாதேவி சமேத பூர்ண வெங்கடேஸ பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 36 ஜோடி காளைகள் பங்கேற்றன. 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் 15 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் முதலாவதாக தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் எஸ்.வி.எஸ்.பி. கருணாகர ராஜா மாட்டு வண்டியும், இரண்டாவதாக ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல் காதர் மாட்டு வண்டியும், மூன்றாவதாக பூசனூர் பிர்த்திஷா மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது. 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் 21 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரைச் சேர்ந்த அப்துல் காதர் மாட்டு வண்டி முதல் இடத்திலும், சிங்கிலிபட்டி சங்குசாமி மாட்டு வண்டி இரண்டாமிடத்திலும், மேலதட்டப்பாறை அய்யனார் மாட்டு வண்டி மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் வண்டிகளை ஓட்டிய பந்தய சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.