வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவர்களுக்கு பரிசளிப்பு

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On :9 ஜூலை 2018, 2:11 am

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ நாரயணகுரு கல்வி வளர்ச்சிக் குழு சார்பில்,  புதுக்கிராமம் பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்,  மாணவிகளை  ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு,  குழுத் தலைவர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். அருள்பாக்கியராஜ்,  கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  குழுச் செயலர் பி.சங்கர்  மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். 
நிகழ்ச்சியில்,  பள்ளிச் செயலர் சோ.சங்கரன்,  பள்ளி மாணவர், மாணவிகள், பெற்றோர்கள், குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.  மாரிக்கண்ணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.