மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஜூலை 2018, 2:07 am

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் தலைமை வகித்தனர். கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னம்மாள் ராமசாமி, கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சண்முகவேல் வரவேற்றார். 
தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ். கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பட்டதாரிகள் தங்களின் தொழில்நுட்பத்திறன், மேலாண்மைத் திறன், தலைமைப் பண்பு, ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பட்டதாரிகளின் பங்கு முக்கியமானது என்றார். 
தொடர்ந்து, 524  மாணவ, மாணவிகளுக்கு இளங்கலைப் பட்டங்களையும், 46 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப் பட்டங்களையும், 8 பேருக்கு முனைவர் பட்டங்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். 
விழாவில் பட்டம் பெற்றவர்களில் 35 இளங்கலை மாணவர்கள் மற்றும் 4  முதுகலை மாணவர்கள் தன்னாட்சி தரப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கோமதி தலைமையில், அனைத்துத் துறை தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.