லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோவில்பட்டியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேங்கியுள்ளன.
கோவில்பட்டி பகுதியிலும் இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 3ஆவது நாளாக தொடர்ந்தது. இதனால் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆலைகளிலிருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பமுடியாமல் தீப்பெட்டி பண்டல்கள், நூல்கள் தேங்கியுள்ளன. தீப்பெட்டி தயாரிப்பு, நூற்பாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டி தினசரி சந்தைக்கு கேரட், உருளைக்கிழங்கு, பல்லாரி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகள் மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மினி லாரிகளில் குறைந்த அளவே வருகின்றன. இதனால் காய்கனி விலை உயர்ந்துவருகிறது. எனவே, லாரிகள் வேலைநிறுத்தப் பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாரிகள் வேலைநிறுத்தத்தால் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலை, ராமசாமி தாஸ் பூங்கா தெரு சாலை, தோட்டிலோவன்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி சம்மேளன நிர்வாகிகளும் லாரி ஓட்டுநர்களும் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தம் குறித்த துண்டுப் பிரசுரங்களை ஓடும் லாரிகளை நிறுத்தி விநியோகித்ததுடன், லாரிகளில் நோட்டீஸ்களை ஒட்டினர். இதை அனுமதிக்க முடியாது விருதுநகர் மாவட்ட போலீஸார் கூறினராம். இதனால் தோட்டிலோவன்பட்டி விலக்கில் காவல் துறையினருக்கும், லாரி சம்மேளனத்தினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்: இந்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு
எழும்பூர் ரயில் நிலையத்தில் விதிமீறல்: பயணிகள் பாதிப்பு!

பாதுகாப்பு, வா்த்தக உறவை வலுப்படுத்த உறுதி: பிரான்ஸ் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


