கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை(ஜூலை 24) நடைபெறவிருந்த காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி பிரதான சாலையில் நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாநில வருவாய் நிர்வாக ஆணையம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இந்நிலையில், வருவாய் வட்டாட்சியர் உத்தரவின்படி நீர்வரத்து ஓடையில் உள்ள 123 கட்டடங்களுக்கான வரி விதிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையரால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகள் தற்போது வரை அகற்றப்படவில்லை.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளின் செயலை கண்டித்து, நல்லிணக்க பண்பாட்டுக் கழகம், 5ஆவது தூண் அமைப்பு, அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான சமாதானக் கூட்டம், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் நடைபெற்றது. அருள்மிகு பூவனநாத சுவாமி கோயிலுக்கு உரியதான ஆக்கிரமிப்பில் உள்ள 108 கடைகளையும் உடனே அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மீதமுள்ள 26 கடைகளுக்கு இந்த வாரத்திற்குள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை வட்டாட்சியரால் எடுக்க வேண்டும், எடுக்கப்பட்ட விவரத்தை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் அழைப்பு!

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!
நூற்றாண்டு காணும் கவிஞர் கண்ணதாசனின் வண்ணச் சித்திரங்கள்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


