சாத்தான்குளம் பகுதியை வாரத்தில் 3 நாள்கள் புறக்கணிக்கும் அரசு பேருந்துகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதிக்கு திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து 40 க்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாசரேத், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர்.
இதில் அரசு பேருந்து தடம் எண் 138ஏ திருநெல்வேலியில் இருந்து பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு இயக்கப்படுகிறது. இப்பேருந்து திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் பகுதிக்கு வரும் முதல் பேருந்தாக உள்ளது. இதில் வெளியூர்களுக்கு சென்று திரும்புபவர்கள் அதிகாலை ஊர் திரும்ப ஏதுவாக உள்ளது. இந்த பேருந்தானது சனிக்கிழமையில் இருந்து திங்கள்கிழமை வரை இயங்குவது இல்லை என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் திருநெல்வேலியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் பேருந்து, திருநெல்வேலியில் இருந்து உடன்குடி செல்லும் பேருந்து ஆகியவை முறையாக இயக்கப்படாமல் அவ்வப்போது இயக்கப்படுகினறன. திருநெல்வேலியில் இருந்து கலுங்குவிளை வழியாக சாத்தான்குளம் வரும் அரசுப் பேருந்து, திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வழியாக பெரியதாழை செல்லும் பேருந்து கடந்த 10 நாள்களாக திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாத்தான்குளம் பகுதியில் இரு வழித்தடத்தில் ஒரு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தடம் எண் 504 எஸ் அரசு பேருந்து சாத்தான்குளத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக மதுரைக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிறுத்தம் செய்யப்பட்டு அதே வழித்தடத்தில் திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் வந்து செல்லும் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் தடம் எண் 173ஏ அரசு பேருந்து திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி வழியாக மணப்பாடுக்கு இயங்கி வந்தது. அது தற்போது நிறுத்தம் செய்யப்பட்டு சாத்தான்குளம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த இரு வழிதடங்களுக்கு ஒரு பேருந்து மட்டுமே மாறி மாறி இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறியது: சாத்தான்குளம் பகுதிக்கு அரசு பேருந்துகள் விடுமுறை நாள்களில் இயக்கப்படாமல் இப்பகுதியை புறக்கணிப்பதால் இதனை எதிர்பார்த்து நிற்கும் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த புதிய பேருந்துகள் சாத்தான்குளம் பகுதிக்கு இன்னும் இயக்கப்படவில்லை.
எல்எஸ்எஸ் பேருந்துகளுக்கு புதிய பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . போக்குவரத்து அதிகாரிகள் இதனை கவனித்து இப்பகுதியில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் எல்லா நாள்களிலும் முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

தவெகவில் இணையும் விஜயபாஸ்கர்? அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


