தமிழினம் இன்று பெற்றிருக்கிற அரசியல் அதிகாரம், மொழி அங்கீகாரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என்றார் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் ஆ.ராசா.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், கட்சித் தலைவர் கருணாநிதியின் 95ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருச்செந்தூர் தேரடித் திடலில் நடைபெற்றது. இதில், ஆ.ராசா பேசியது:
கடந்த 60 ஆண்டுகளில் தமிழ் மொழியும், தமிழினமும் பெற்றிருக்கிற அரசியல் அதிகாரம், மொழி ஆளுமை, மொழி அங்கீகாரம் ஆகியவற்றுக்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதிதான். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது, தான் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் 13 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொடுத்தேன் என்று பெருமை பேசுகிறார். ஆனால் 1975ஆம் ஆண்டிலேயே திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தமிழகத்தில் குக்கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்து கொடுத்தார். இன்றைய இளைஞர்கள் வரலாற்றைப் படிக்காமல் சீமான், கமல், ரஜினி போன்றவர்களிடம் போய் சேர்கின்றனர்.
நீட் தேர்வு தாழ்த்தப்பட்டவருக்கும், ஏழைகளுக்கும் எதிரானது. நீட் தேர்வு வேண்டாம் என தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதா என்ன ஆனது?
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தின்போது, பாஜக தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறிய அதிமுக, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது பாஜகவுக்கு ஆதராவான நிலைப்பாட்டை எடுக்கிறது என்றார் அவர்.
கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஜெ.ஜெகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பை.மூ.ராமஜெயம், ஜனகர், அனஸ், நடராஜன், ஜோதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் செங்குழி ரமேஷ் வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசினார்.
மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், மருத்துவரணி துணை அமைப்பாளர் செ.வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், பூபதி, பிரம்மசக்தி, மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், மாவட்ட துணைச் செயலர்கள் ஆறுமுகப்பெருமாள், முகமது அப்துல்காதர், ஒன்றியச் செயலர்கள் மாடசாமி, ஜோசப், பாலசிங், ரவி, நல்லமுத்து, பார்த்திபன், நவின்குமார், மகாராஜன், சண்முகையா, கொம்பையா, ஒன்றிய துணைச் செயலர் வாழவல்லான் மகராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ராஜேந்திரன், நகரச் செயலர்கள் இளங்கோ, பெருமாள், முத்துராமலிங்கம், ரவிசெல்வகுமார், கல்யாணசுந்தரம், முருகப்பெருமாள், பார்த்திபன், ஜாண்பாஸ்கர், பாலமுருகன், வரதராஜ ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் சுடலை நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


