மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட  அதிமுக சார்பில்,  மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:59 am IST

தூத்துக்குடி மாவட்ட  அதிமுக சார்பில்,  மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு,  மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.   மாவட்ட துணைச் செயலர்கள் மோகன்,  தங்கமாரியப்பன்,  பொருளாளர் ஜெபமாலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும்,  மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலருமான கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு பேசினார்.  மக்களவைத் தேர்தலை சந்திக்க அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
 கூட்டத்தின்போது,  அதிமுக அரசின் சாதனைகளை கிராமங்கள் தோறும் கொண்டுச் சென்று பிரசாரம் செய்வது என்றும்,  மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1593 வாக்குச்சாவடிகளிலும் பூத் முகவர் குழு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி,   மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர் என். சின்னத்துரை,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால்,  முன்னாள் வாரியத் தலைவர் இரா. அமிர்தகணேசன்,  மாவட்ட வழக்குரைஞர் அணி செயலர் யு.எஸ். சேகர்,  மேற்கு பகுதிச் செயலர் ஏ. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.