குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்பு, இளம் வயது திருமணத்தை தடுத்தல்


கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்பு, இளம் வயது திருமணத்தை தடுத்தல் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவின்பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தங்கவேல், மாவட்ட குழந்தைகள் நல சமூக சேவகர் பிரகாஷ்ராஜ், வட்டார ஊட்டச்சத்து அலுவலர் தாஜூநிஜாபேகம் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்முறை, இளம் வயது திருமணம் தடுத்தல் உள்ளிட்டவை குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்; குழந்தைத் தொழிலாளர்கள் முறையை முற்றிலும் அகற்றுதல், பள்ளி செல்லாக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கிராம மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...