என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மின்னொளி வாலிபால் போட்டி: நரையன்குடியிருப்பு அணிக்கு முதல் பரிசு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் நரையன்குடியிருப்பு அணிக்கு முதல் பரிசு பெற்றது.

Updated On :14 மே 2018, 7:17 pm

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் நரையன்குடியிருப்பு அணிக்கு முதல் பரிசு பெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பில் திருதமிழ் அறக்கட்டளை, தட்டார்மடம் காவல்துறை ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டிகள் மே 9 ஆம்தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை
(மே 13) வரை 5 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் போட்டியினை திருதமிழ் அறக்கட்டளை நிர்வாகி திபாகரன், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் நரையன்குடியிருப்பு, முதலூர் ஓய்எம்சிஏ அணி, காயல்பட்டினம், கொம்மடிக்கோட்டை, கொழுந்தட்டு,
புதுக்குளம், மெஞ்ஞானபுரம் ஜான்தாமஸ் அணி, திசையன்விளை, நெல்லை பிரண்ட்ஸ் கிளப் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதி போட்டியில் நரையன்குடியிருப்பு, நெல்லை பிரன்ட்ஸ் கிளப், தட்டார்மடம் போலீஸ் அணி, முதலூர் ஓய்எம்சிஏ அணிகள் மோதின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் நரையன்குடியிருப்பு அணியும், நெல்லை பிரண்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில் நரையன்குடியிருப்பு அணி வென்று முதல் பரிசான ரூ. 30 ஆயிரம் மற்றும் கோப்பை பெற்றது. 2ஆம் பரிசு பரிசான ரூ. 20ஆயிரம் நெல்லை பிரண்ட்ஸ் கிளப் அணியும், 3ஆம் பரிசான ரூ. 10ஆயிரம் முதலூர் ஒய்எம்சிஏஅணியும், 4ஆம் பரிசு தட்டார்மடம் போலீஸ் அணி பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு திருதமிழ் அறக்கட்டளை நிர்வாகி திபாகரன் தலைமை வகித்தார். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புசெல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.