இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் லட்சியம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் லட்சியம் என்றார்  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

Updated On :5 நவம்பர் 2018, 7:51 am IST

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் லட்சியம் என்றார்  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் மேலும் கூறியது: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதற்காக 200 பேருக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் தலைமையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் 20 ஆண்டு காலமாக கட்சியில் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். ஜெயலலிதாவால் முதலில் எம்.எல்.ஏ. ஆகவும், தற்போது அமைச்சராகவும் ஆகியுள்ளேன். 
நாங்கள் அதிமுகவில் பொறுப்பேற்ற பின் தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீதம் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. தற்போதுகூட முதன் முதலாக நெல்லை- தூத்துக்குடி ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெற்றுள்ளோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.