மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வீட்டில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 8:04 pm

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை மின்னல் தாக்கியதில் பெண் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 240 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதிகபட்சமாக காயல்பட்டினம் பகுதியில் 62 மி.மீ., திருச்செந்தூர் பகுதியில் 57 மி.மீ., சாத்தான்குளம் பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 28 மி.மீ., சூரங்குடியில் 13 மி.மீ, குலசேகரன்பட்டினத்தில் 12 மி.மீ. மழை பதிவாகியது.
இந்நிலையில், தூத்துக்குடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் உப்பளத் தொழிலாளி சேர்மபாண்டி (37) வீட்டில் மின்னல் தாக்கியது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சேர்மபாண்டி, அவரது மனைவி தேவிகா (32), மகள்கள் கீர்த்தனா(11), பிருந்தா (7) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேவிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூவரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.