6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கோவில்பட்டி ஜான்போஸ்கோ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On :3 செப்டம்பர் 2018, 2:39 am

கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் வசந்தா தலைமை வகித்தார்.  புனித லூயிசா பள்ளித் தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ் கண்காட்சியை திறந்து வைத்து, படைப்புகளைப் பார்வையிட்டார். 
கண்காட்சியில், தரைதொடைப்பான், எரிபொருள் ஆற்றல் சேமிப்பு,  காற்றாலை, பாக்டீரியா மாதிரி,  நீர் சேமிப்பு மின்கலன், பசுமை வீடு திட்டம், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருந்தன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கும் குழு உறுப்பினர்களாக புனித சூசை தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியை தனம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் அகிலா, செண்பகவல்லி, கனகலதா ஆகியோர் செயல்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.