கோவில்பட்டியில் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொ) ஆவுடையப்பன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், முத்துவிஜயன், சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் போலீஸார் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தெற்கு திட்டங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் செண்பகப்பேரியைச் சேர்ந்த முத்தங்கு மகன் பாலமுருகன்(35), எப்போதும்வென்றானையடுத்த ஆதனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் சோலைச்சாமி (24) என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் இருவரும் கோவில்பட்டியில் பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், கோவில்பட்டி கடலைக்காரத் தெருவில் நடந்து சென்ற பாலகிருஷ்ணன் மகள் நர்மதாவிடம் (15) 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம் முத்துநகரைச் சேர்ந்த லிங்கசாமி மகள் கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலிகளையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

தொட்டியம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமில் உதவிகள்
ஹெளரா ரயிலில் 11 கிலோ குட்கா பறிமுதல்

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தம்: எஸ்ஆா்எம்யு முடிவு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


