இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு அதிகாரி திடீர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா. பழனிசாமி  அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இரா. பழனிசாமி  அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி, எப்போதும் வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அவர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நெகிழி ஒழிப்பில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவுத் துறை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் பதிவாளர் அமலதாஸ், மண்டல இணைப்பதிவாளர் அருளரசு, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, துணைப் பதிவாளர்கள் சிவகாமி, மாரியப்பன், சத்யசீலன், கோமதி நாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.