பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

கோவில்பட்டியில் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவில்பட்டியில் திருட்டில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொ) ஆவுடையப்பன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், முத்துவிஜயன், சிறப்பு உதவி ஆய்வாளர் காந்தி மற்றும் போலீஸார் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, தெற்கு திட்டங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.  பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் செண்பகப்பேரியைச் சேர்ந்த முத்தங்கு மகன் பாலமுருகன்(35), எப்போதும்வென்றானையடுத்த ஆதனூரைச் சேர்ந்த முனீஸ்வரன் மகன் சோலைச்சாமி (24) என்பது தெரியவந்தது. 
மேலும், அவர்கள் இருவரும் கோவில்பட்டியில் பெண்ணிடம் நகைகளை பறித்துச் சென்ற திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், கோவில்பட்டி கடலைக்காரத் தெருவில் நடந்து சென்ற பாலகிருஷ்ணன் மகள் நர்மதாவிடம் (15)  2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வழக்கு மற்றும் தெற்கு திட்டங்குளம் முத்துநகரைச் சேர்ந்த லிங்கசாமி மகள் கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. 
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த 4 பவுன் தங்கச் சங்கிலிகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.