
பொத்தக்காலன்விளையில் விவசாயிகள் நலச் சங்கக் கூட்டம்
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தக்காலன்விளையில் விவசாயிகள் நலச் சங்கம் மற்றும் நீர் ஆதார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தக்காலன்விளையில் விவசாயிகள் நலச் சங்கம் மற்றும் நீர் ஆதார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, பொத்தக்காலன்விளை காமராஜ் தலைமை வகித்தார். நரையன்குடியிருப்பு வரதராஜன், படுக்கப்பத்து சரவணன், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்க இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துமணி வரவேற்றார். கூட்டத்தில், பொத்தக்காலன்விளை விவசாய நலச் சங்கத் தலைவராக காமராஜ், செயலராக சிலுவை ரூபேஸ்குமார், பொருளாளராக லூர்துமணி, துணைத் தலைவராக இருதயராஜ், துணைச் செயலராக ஜஸ்டின்ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளராக எட்வர்ட் லாரன்ஸ், அமல்ராஜ், ஜஸ்டின், ஜான் ஸ்டீபன்ராஜ், சகாய செல்வன், ராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து இயற்கையை பேணும் வகையில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்ட ஆலோசகர் ஆரோன் டேவிட் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




