முக்காணியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
முக்காணியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முக்காணியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்வுகள், முக்காணி ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரம் பற்றிய சமுதாய பங்களிப்பு விழாவாக நடத்தப்பட்டது. சுற்றுப்புற சுகாதாரத்தை வலிலியுறுத்தி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதையொட்டி நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு கண்காட்சியில் மாணவ, மாணவியரின் கண்கவர் விழிப்புணர்வு கலைப் படைப்புகள் இடம் பெற்றன. மேலும், தூய்மை இந்தியா தலைப்பில் மாணவி சந்தியா உரையாற்றியதை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஆட்சியர் பிரசாத் பாராட்டி கெளரவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி, பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சங்கரநாராயணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் லெ. வேலாயுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





