கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த அழகுமுத்தையா மகன் ராமகிருஷ்ணன்(34). இவர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தாராம். நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் துணை மின்நிலையம் அருகே சென்றபோது, பழுதாகி நின்ற லாரியில்
மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராமகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ராமகிருஷ்ணனுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


