நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பரோலில் வந்த சிறைக்கைதி  தலைமறைவு

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 5:56 am IST

சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி திடீரென மாயமானதால் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகையா (45). கடந்த 1990 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்தது.  இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த சண்முகையா தனது தாயை பார்ப்பதற்காக கடந்த  15 ஆம் தேதி பரோலில் வெளியே வந்தாராம்.  21 ஆம் தேதி மாலை அவர் மீண்டும் சிறைக்கு திரும்பி இருக்க  வேண்டும் என்ற நிலையில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சிறைக்கு திரும்பாதது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
 இதையடுத்து, வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீஸார் தலைமறைவான சண்முகையாவை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.