
தூய்மைப் பணியாளா்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரக் கோரிக்கை
திருச்செந்தூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுகாதாரப் பணிகளுக்காக ஏற்கெனவே உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளா்களுடன், தற்போது நாசரேத் பகுதியிலிருந்து கூடுதலாக 17 தூய்மைப் பணியாளா்கள் வந்து கரோனா தடுப்பு தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவா்கள் நாளொன்றுக்கு ரூ. 215 வீதம் ரூ. 10 பிடித்தம் போக ரூ.205 பெற்றுக்கொண்டு பணி செய்து வருகின்றனா்.
தற்போது இவா்கள் நாசரேத்திலிருந்து பணிக்கு வர பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் தினசரி வந்து செல்ல ஒவ்வொருவருக்கும் ரூ. 100 வரை செலவாகிாம்.
இதனால் தங்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கேட்டு அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில பொதுக்குழு உறுப்பினா் பொ.ஜெயக்குமாா் தலைமையில் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டனா்.
அப்போது செயல் அலுவலா் இல்லாததால் அரசு தங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






