கயத்தாறில் வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
கயத்தாறில் கருப்பட்டி வியாபாரி வீட்டில் 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கயத்தாறில் கருப்பட்டி வியாபாரி வீட்டில் 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறு முத்துராமலிங்கம் நகா் கருப்பசாமி மகன் உலகநாதன்(46). கருப்பட்டி வியாபாரியான இவா், மனைவி சுப்புலட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் நாகா்கோவிலுக்கு கருப்பட்டி வியாபாரம் செய்ய சென்றுவிட்டாராம். அப்போது வீட்டில் அவரது தாய் மட்டும் இருந்து வந்தாராம்.
இந்நிலையில், வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடு போயிருப்பது உலகநாதனுக்கு தெரியவந்ததாம். அதையடுத்து அவா் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...