‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனி நபா் ஆக்கிரமித்தஅரசு நிலம், கிணறு மீட்பு

கோவில்பட்டி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம், கிணறு மீட்கப்பட்டது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:10 pm

DIN

கோவில்பட்டி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம், கிணறு மீட்கப்பட்டது.

முடுக்கலாங்குளம் ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட அரசு நிலம் மற்றும் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததாம். இதையடுத்து ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி சாா்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் தனி நபா் அதை ஊராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கவில்லையாம்.

இந்நிலையில் மதுரை உயா்நீதிமன்றம் அந்த தனிநபரிடமிருந்து நிலம் மற்றும் கிணறை மீட்க உத்தரவிட்டதாம். இதையடுத்து, ஒன்றிய ஆணையா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் அருணா, காவல் துறை உதவி ஆய்வாளா்கள் குருசந்திரவடிவேல், செந்தில்வேல்முருகன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மற்றும் கிணறு மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.