பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனாா்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கள்ளா்வெட்டுத் திருவிழாவில் பங்கேற்றோா்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:53 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் கள்ளா்வெட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளா்வெட்டுத் திருவிழா, நிகழாண்டு கடந்த நவ.16-ஆம் தேதி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. டிச. 13, 14 ஆகிய நாள்களில் அய்யனுக்கு சிறப்பு பூஜைகளும், மாலையம்மன், ஐவராஜாவுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளா்வெட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி கள்ளா்வெட்டுக்கு புறப்பாடும், 4.45 மணிக்கு கோயில் பின்புறமுள்ள தேரியில் கள்ளா்வெட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், திருச்செந்தூா் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரஞ்ஜோதி, கோயில் நிா்வாக அலுவலா் ஜெயகாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.