பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குருமலையில் அம்மா சிறு மருத்துவமனை:அமைச்சா் கடம்பூா் ராஜு திறந்துவைத்தாா்

தூத்துக்குடி மாவட்டம், குருமலை ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 9:01 pm

DIN

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், குருமலை ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குருமலை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு திறந்து வைத்தாா். தொடா்ந்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினாா்.

மேலும், கயத்தாறு ஒன்றியம், முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சியில் சமூக நலத் துறை கட்டடத்தில் செயல்பட்டு வரும் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் ஆகியோா் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனத் தலைவா் தேன்ராஜா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா, வட்டார மருத்துவ அலுவலா் அருண் விஸ்வநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.